Dysmenorrhea
Published 20 May 2021 · Updated 9 June 2026

பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் வரக்கூடிய வயிறு வலி என்பது பொதுவானது. ஆனால் வலி உணர்வு மாதவிடாய் நாட்களுக்கு முன்பிருந்து தொடங்கி பிறகும் தீவிரமாக இருக்கும் போது அது கர்ப்பப்பையில் உண்டாகியிருக்கும் ஏதேனும் குறைபாட்டின் அறிகுறியாகவும் இருக்கலாம். இதை டிஸ்மெனோரியா என்று சொல்வார்கள்.
டிஸ்மெனோரியா என்பது வழக்கமாகப் பெண்களுக்கு மாத விலக்கு ஏற்படும் சமயங்களில் தோன்றும்; ஒருவகை சீர்கேடாகும்.மாத விலக்கு ஏற்படும் போதோ, அல்லது அதற்கு முந்தைய அல்லது பிந்தைய நாட்களிலோ, இடுப்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதிகளில் தோன்றும் தொடர்ச்சியான மந்தமான வலியே டிஸ்மெனோரியா என்பதாகும். ஏனைய அறிகுறிகள், முதுகின் கீழ்ப்பகுதியில் வலி, வயிற்றுப்போக்கு, குமட்டல் அல்லது வாந்தி ஆகியவை ஆகும். டிஸ்மெனோரியா இரண்டு வகைப்படும். அவை முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை டிஸ்மெனோரியா என்பதாகும். முதல் நிலை டிஸ்மெனோரியா என்பது அடையாளம் காணக்கூடிய வகையில் இடுப்பில் நோய் எதுவும் காணப்படாது. வளரிளம் பருவப் பெண்களுக்கு இது சாதாரணமாகக் காணப்படுகிறது. 5௦% க்கும் மேற்பட்ட பெண்களை இது பாதிக்கிறது. 15% பெண்களை இந்நோய் மிகவும் கடுமையாகப் பாதிக்கிறது. ;இரண்டாம் நிலை டிஸ்மெனோரியா என்பது மாதவிலக்குக் காலங்களில் தோன்றக்கூடிய வலியேயாகும். இது பெரும்பாலும் இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படக்கூடிய ஒரு சீர்கேடாகும்.
If you need an expert #Gynecologist Opinion, #AskAshika – Your Friendly Gynecologist in #Tirunelveli
For Consultation:
Phone: +91 9894937345
Dr. Ashika M.B.B.S., M.S(OG)
Adolescent #Gynecology & #Fertility
Management of High-Risk Pregnancy
Complicated Vaginal Deliveries
General Obstetrics and #Gynecology
#hibawomensclinic#gynecologistintirunelvlei#doctorsintirunelveli#pcod#pcos#womendoctors#womenempowerment#womensupportingwomen#womenshealth#pregancycare — in Tirunelveli.
Have a question about your health?
Book an Appointment